திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே, சாக்கடை பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி - ராயபுரம் ரோட்டை இணைக்கும் ரோட்டில், புதிய கால்வாய் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. ரோட்டின் இருபுறமும் கால்வாய் அமைக்க, அங்கிருந்த மரங்கள், வெட்டி அழிக்கப்பட்டன.பொதுமக்கள் எதிர்ப்பால், 'சர்வே' நடத்தி, மரத்தை வெட்டாமல், கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது.சர்வே பணி நடக்க தாமதம் ஏற்பட்டதால், கால்வாய் பணி அப்படியே போடப்பட்டது.கடந்த பல மாதங்களாக, கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டதால், கழிவுநீர் தேங்கி, கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.கிராம நிர்வாக அலுவலகம் வருவோர், கொசுக்கடிக்கு பயந்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம், விரைவில் அப்பணியை முடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE