கோவை:சிவாலயங்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. நெரிசலின்றி அபிஷே கத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். கலாசார கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு அனுமதி அளித்ததையடுத்து பெரும்பாலான கோவில்களில், இசைநிகழ்ச்சிகள் மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள்துவங்கியுள்ளன.அதன் ஒரு பகுதியாக, பிரதோஷ காலத்தில் பக்தர்கள் சிவஸ்லோகங்களையும், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை குழுவாக இணைந்து பாராயணம் செய்வர். அப்போது இறைவனுக்கு பால், தேன், தயிர், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷே கம் செய்யப்படும்.அதன்படி, நேற்று கோவையிலுள்ள சிவாலயங்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சகலதிரவிய அபிஷே கம் நடந்தது. இதை பக்தர்கள் சமூக இடைவெளி விட்டும், முகக்கவசம் அணிந்தும் வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE