பொது செய்தி

தமிழ்நாடு

நம்பிக்கை தருகிறது 'வம்பன்' விதைச்சான்று அதிகாரி தகவல் 

Added : நவ 28, 2020
Share
Advertisement
கோவை:இந்த வருடம் கோவையில், 1600 மெட்ரிக் டன் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உளுந்து பயிரில் 'வம்பன்-8' என்ற ரகம் பயிரிடப்பட்டுள்ளது.இந்த ராபி பருவம், பயறு வகை மகசூலுக்கு ஏற்ற பருவமாகும். தொண்டாமுத்துார் பகுதியில், 6000 ஏக்கர் பயறு வகைகளும், 1200 ஏக்கர் நிலக்கடலையும் பயிரிட்டுள்ளனர்.இதில், 123 ஏக்கர் பயறு வகைகள் மற்றும் 24 ஏக்கர் நிலக்கடலை விதைப்பண்ணையாக, கோவை விதை
 நம்பிக்கை தருகிறது 'வம்பன்' விதைச்சான்று அதிகாரி தகவல் 

கோவை:இந்த வருடம் கோவையில், 1600 மெட்ரிக் டன் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உளுந்து பயிரில் 'வம்பன்-8' என்ற ரகம் பயிரிடப்பட்டுள்ளது.இந்த ராபி பருவம், பயறு வகை மகசூலுக்கு ஏற்ற பருவமாகும். தொண்டாமுத்துார் பகுதியில், 6000 ஏக்கர் பயறு வகைகளும், 1200 ஏக்கர் நிலக்கடலையும் பயிரிட்டுள்ளனர்.இதில், 123 ஏக்கர் பயறு வகைகள் மற்றும் 24 ஏக்கர் நிலக்கடலை விதைப்பண்ணையாக, கோவை விதை சான்று துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் உள்ள விதைப்பண்ணைகளை ஆய்வு செய்த, கோவை விதைச்சான்று உதவி இயக்குனர் வானதி கூறியதாவது:தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து தொடர் பயிற்சியும், ஆலோசனையும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த பணியில் வேளாண் துறை அலுவலர்கள் கவனமாக பணி செய்தால்தான், தரமான விதை உற்பத்தி மற்றும் விதை விநியோகத்தை, சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும்.இந்த வருடம் கோவையில், 1600 மெட்ரிக் டன் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உளுந்து பயிரில் 'வம்பன்-8' என்ற ரகம் பயிரிடப்பட்டுள்ளது.இந்த ரகத்தை, 65 அல்லது 75 நாட்களில் அறுவடை செய்யலாம்.ஏக்கருக்கு 600 முதல் 700 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. அதே போல் கோ -8 ரகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X