கோவை:கொரோனா தொற்று காலத்தில், மிர்ராஸ் காபி தயாரிப்பின் ஆன்லைன் விற்பனை இரட்டிப்பானது. இதன் மூலம், நிறுவனங்களுக்கான விற்பனை உயர்ந்துள்ளதாக, மதர் மிர்ரா கம்பெனி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சுந்தர் சுப்ரமணியம் தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் மிர்ராஸ் காபி, விற்பனையில் முன்னணியில் உள்ளது. சூப்பர் மார்க்கெட், மால்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் ஆன்லைன் வாயிலாக, விற்பனை வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. நோய் தொற்று காலத்தில், நாடு முழுவதும் நல்ல விற்பனை நடந்தது.ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர், நேரடியாக இணையதளத்தில் வாங்குகின்றனர். இணையதள அறிக்கையின்படி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கன்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மிர்ராஸ் காபியை வாங்க, அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE