பொது செய்தி

தமிழ்நாடு

அகல் விளக்கு தொழிலாளர் வாழ்வில் ஒளி பிறக்குமா?

Added : நவ 28, 2020
Share
Advertisement
தஞ்சாவூர்:'அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கார்த்திகை தீபத்திருவிழா நாளை, 29ல் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி வீடு, கடை, அலுவலகம், கோவில்களில், அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது வழக்கம். தஞ்சையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில், மண்பாண்ட தொழிலாளர்கள்
 அகல் விளக்கு தொழிலாளர் வாழ்வில் ஒளி பிறக்குமா?

தஞ்சாவூர்:'அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழா நாளை, 29ல் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி வீடு, கடை, அலுவலகம், கோவில்களில், அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது வழக்கம். தஞ்சையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில், மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பல ஆண்டுகளாக, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினரில் பலர், வேறு தொழிழுக்கு சென்று விட்டனர்.

கார்த்திகைக்காக, இரண்டு மாதங்களுக்கு முன்பே, விளக்குகள் தயாரிக்கும் பணியை துவக்கி தினமும், 1,000 விளக்குகள் வரை தயாரிக்கின்றனர்.இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் விற்பது வழக்கம். ஆனால், கொரோனா ஊரடங்கால், விற்பனை மந்தமாகி விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்தாண்டு, தீபத்திற்கு முன் பருவ மழை தீவிரம் அடைந்ததால், அகல் விளக்கு தயார் செய்தும், சூளையில் வேக வைக்க முடியவில்லை. இதனால், நடப்பு ஆண்டு பருவ மழைக்கு முன், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

கொரோனாவால், கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவது தடைபட்டது. இதனால், விற்பனையும் மந்தமாக உள்ளது. மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X