கோவை:மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழிற்சாலைகளில் பாதுகப்பாக பணிபுரிவது குறித்து ஆலோசனைகள் வழங்கும், இணைய வழி பயிலரங்கு இன்று நடக்கிறது.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் அருள் குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பாக பணிபுரிவது, மின் விபத்து தடுப்பு உள்ளிட்ட தலைப்புகளில் விளக்கம் அளிக்கிறார்.இன்று காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், 822 5033 2895 என்ற ஜூம் ஐ.டி., மற்றும் lub என்ற கடவு சொல் மூலம் பங்கேற்கலாம் என, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE