பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா 'இ - பாஸ்' மேலும் தளர்வு

Added : நவ 28, 2020
Share
Advertisement
கூடலுார்:தேனி மாவட்டம், குமுளி வழியாக கேரளா செல்பவர்களுக்கு, 'இ - பாஸ்' கட்டாயம். மார்ச்சில் இருந்து ஜூலை வரை பாஸ் பெற்று சென்ற அனைவரும், கொரோனா பரிசோதனை செய்த பின் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், காய்ச்சல் பரிசோதனை மட்டும் செய்யப்பட்டது.கடந்த இரு மாதங்களாக, இடுக்கி மாவட்ட ஏலத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பாஸ் நம்பரை குறித்துக் கொண்டு, டோக்கன்

கூடலுார்:தேனி மாவட்டம், குமுளி வழியாக கேரளா செல்பவர்களுக்கு, 'இ - பாஸ்' கட்டாயம். மார்ச்சில் இருந்து ஜூலை வரை பாஸ் பெற்று சென்ற அனைவரும், கொரோனா பரிசோதனை செய்த பின் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், காய்ச்சல் பரிசோதனை மட்டும் செய்யப்பட்டது.

கடந்த இரு மாதங்களாக, இடுக்கி மாவட்ட ஏலத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பாஸ் நம்பரை குறித்துக் கொண்டு, டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், காலதாமதம் ஏற்பட்டு, தொழிலாளர்கள் நீண்ட நேரம்காத்திருந்து சிரமப்பட்டனர்.

நேற்று முதல், 'இ - பாஸ்' எடுப்பதில், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குமுளியில் முகாமிட்டிருந்த சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறையினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர். எல்லையில் உள்ள போலீசாரிடம், இ - பாஸை மட்டும் காட்டி செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X