கோவை:இந்துக்கள் மேற்கொள்ளும் ஆன்மிக புனித யாத்திரைகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்குவதோடு மானியத்தையும் வழங்குகிறது.இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அ.சா.கு.எண் 47721/20 நாள். 21.08.2019 ன் அடிப்படையில், மானசரோவர், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் முக்திநாத் போன்ற புனித யாத்திரை செல்லும் ஆன்மிக யாத்ரிகர்களுக்கு, முறையே 40,000 ரூபாயும், 10,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.இந்நிலையில், சபரிமலை மற்றும்பழனி ஆகிய புனித தலங்களுக்கு செல்பவர்களுக்கும் மானியத்தொகைவழங்க வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கை குறித்து ஆலோசித்து, விரைவில் மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE