பொது செய்தி

தமிழ்நாடு

உங்கள் வீட்டில் இனி...

Added : நவ 28, 2020
Share
Advertisement
தமிழர்களின் தொன்மையான பண்டிகையான திருகார்த்திகைக்கு, பாரம்பரிய மண் விளக்கை தேர்ந்தெடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.வண்ண, வண்ண டிசைன்களில் பிளாஸ்டிக் விளக்குகள் கிடைத்தாலும், எண்ணெய் விட்டு, மண்வாசத்துடன் சேர்ந்து ஒளிரும் அகல் விளக்குகளில்தான், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.களிமண்ணையும், நீரையும் சேர்த்து, சூரிய ஒளியில் கைவைத்து, காற்றின்
 உங்கள் வீட்டில் இனி...

தமிழர்களின் தொன்மையான பண்டிகையான திருகார்த்திகைக்கு, பாரம்பரிய மண் விளக்கை தேர்ந்தெடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.வண்ண, வண்ண டிசைன்களில் பிளாஸ்டிக் விளக்குகள் கிடைத்தாலும், எண்ணெய் விட்டு, மண்வாசத்துடன் சேர்ந்து ஒளிரும் அகல் விளக்குகளில்தான், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.களிமண்ணையும், நீரையும் சேர்த்து, சூரிய ஒளியில் கைவைத்து, காற்றின் உதவியால், நெருப்பில் சுட்டு என ஐம்பூதங்களால் தயாரிக்கப்படும் இந்த விளக்குகளே, குயவர்களின் வாழ்வாதாரம். மண் விளக்குகள் சூழலுக்கு மிகவும் உகந்தவை. காற்றில் அணையாத விளக்கு!

ஏராளமான புதிய, புதிய டிசைன்களில் தற்போது மண் விளக்குகள் கிடைக்கின்றன. குட்டி, குட்டி விளக்குகளை வாங்கி, வீடு முழுவதும் ஏற்றலாம். வீடு முழுவதும் ஜெகஜ்ஜோதியாய் மின்னும். இரண்டு முதல், 21 விளக்குகள் வரை குட்டி விளக்குகள் செட்டுகளாக கிடைக்கின்றன.காற்று அதிகமாக அடிக்கும் பகுதி, மொட்டை மாடி என்றால், அணையா விளக்கை பயன்படுத்தலாம். இதில், தட்டில் விளக்கும், மூடுவதற்கு மூடியும் உண்டு. மூடியை சுற்றிலும் சிறிய, சிறிய ஓட்டை டிசைன்கள் இருப்பதால், வெளிச்சமும் வரும், காற்றுக்கு அணையாமலும் இருக்கும்.இதிலே கொஞ்சம் வித்தியாசமாக, கண்ணாடி மற்றும் தேங்காய் குடுவைக்குள் விளக்கு இருக்கும்படியும் கிடைக்கிறது. வீடுகளில் மாட்டி தொங்க விடும் வகையில், துாக்கணாங் குருவி கூடு போன்ற அமைப்புக்குள்விளக்குகள் இருப்பது போல கிடைக்கிறது.'கிராண்ட்' ஆக வேண்டுமெனில், லட்சுமி, அம்மன், விநாயகர் உருவங்களை சுற்றி ஐந்து முக விளக்குகள் இருக்கும், மணிகள் தொங்கும் பெரிய விளக்கு செட் கிடைக்கிறது.அழகிய கோலங்களுக்கு நடுவில் வைக்கும்படி, இரண்டு, மூன்று, ஐந்து அடுக்கு விளக்குகள், குத்து விளக்கு டிசைன், தாமரை விளக்கு, மயில் விளக்கு, துளசி மாடம் என வித, விதமான டிசைன்களில் விளக்குகள் கிடைக்கின்றன.எண்ணெய் 'லீக்' ஆகுதா!n விரிசல்கள் இல்லாத விளக்குகளை, கவனமாக பார்த்து வாங்க வேண்டும். விரிசலில் எண்ணெய் முழுவதுமாக வெளியேறிவிடும்.n நன்கு குழியாக இருக்கும் விளக்கை தேர்ந்தேடுக்க வேண்டும். இதன்மூலம், அதிக எண்ணெய் ஊற்றலாம், நீண்ட நேரம் விளக்கு எரியும்.n விளக்குகளை வாங்கியவுடன் குறைந்தது, மூன்று மணி நேரம் நீரில் மூழ்கும்படி ஊற வைத்து, வெயிலில் காய வைக்க வேண்டும். இதனால், எண்ணெய் லீக் ஆகாது.n காற்று அடித்தால் திரியில் விளக்குகளை சுலபமாக ஏற்ற முடியாது. இதற்கு, கற்பூரத்தை பொடியாக்கி திரிகளில் வைத்தால், சீக்கிரமாக பற்றிவிடும்.சுத்தம் செய்வது ஈசி!n விளக்குகளில் இருக்கும் திரி மற்றும் மீதமிருக்கும் எண்ணெயை, முதலில் டிஷ்யூ பேப்பர் அல்லது துணியைக்கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.n கொதிக்கும் நீரில் சோப்பு பவுடர் அல்லதுஏதேனும் பாத்திரம் கழுவும் லிக்விட்டை சேர்த்து, அரை மணி நேரம் விளக்குகள் மூழ்கும்படி, ஊற வைக்க வேண்டும். எண்ணெய், அழுக்குகள் தனியாக பிரிந்து நீரின் மேல் நிற்கும்.n கைகளால் நன்கு துடைத்து கழுவி, மற்றொரு நீர் நிரம்பிய பாத்திரத்தில் மூழ்கும்படி போடவும். மீண்டும் லேசாக கழுவி, நீர் நிரம்பிய மற்றொரு பாத்திரத்தில் போடவும்.இறுதியாக, விளக்குகளை வெயிலில் காய வைத்து எடுத்தால், புதிது போல பளபளக்கும்!கோவையில் செட்டிவீதியை அடுத்து சேத்துமாவாய்க்கால் பகுதி, கவுண்டம்பாளையம், கணபதி, நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லுார் ஆகிய பகுதிகளில் கார்த்திகை மண் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.இந்த ஆண்டு துளசிமாட விளக்கு, நவரத்தின விளக்கு, கோபுர விளக்கு, கலர்விளக்கு, பல வண்ணச்சாந்து விளக்கு, ஜிகினா விளக்கு, பஞ்சமுக விளக்கு...இப்படி விளக்கில் பல வெரைட்டி விற்பனைக்கு வந்துள்ளது.ஒரு விளக்கு ஒரு ரூபாய்க்கு துவங்கி, அதிக பட்சம் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவை மண்சட்டி, அடுப்பு, மண்பானை தயாரிப்பு நிலையங்கள் அல்லாமல், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் விற்பனையாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X