எண்பதுகளின் டிரெஸ், ஜூவல்லரி, மேக்கப், ஹேர் ஸ்டைலை, 90ஸ் கால நாம் கலாய்த்திருப்போம். இன்று, 20ஸ் அதே பழைய ஸ்டைலை விரும்புகிறோம்.அந்த வகையில், 90 களில் சோக்கர் நெக்லஸ், கோலிவுட், பாலிவுட், சேண்டல்வுட் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, நம்மூர் இளம்பெண்களையும் கவர்ந்துள்ளது. சோக்கர் என்பது, கழுத்தில் நெருக்கமாக அணியும் நெக்லஸ் வகைகளில் ஒன்றாகும். நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும், ஸ்டைலிஷ் லுக் தரும்.பட்டு, காட்டன் மற்றும் டிசைனர் சேலைகள், சல்வார், சாரா, லெகங்கா குர்தா ஆகிய ஆடைகளுக்கு, மிகவும் பொருத்தமாக இருக்கும். பல்வேறு ஆடைகளுக்கு அணியும் வகையில், நிறைய சோக்கர் வெரைட்டி சந்தையில் கிடைக்கிறது.தங்கநிற சோக்கர்தங்கநிற சோக்கர்கள் உங்களுக்கு ராயல் தோற்றத்தை கொடுக்கும். பட்டுப்புடவையில், வேலைப்பாடுள்ள தங்க நிற சோக்கர்களை அணிந்தால், ராணி போல ஜொலிப்பீர்கள். இந்த நகை, ரிச் லுக் தருவதால், திருமணம் மற்றும் ஆடம்பர விழாக்களுக்கு அணியலாம். பிரைட் கலர் ஆடைகளுக்கு மிகவும் எடுப்பாகஇருக்கும்.இந்தியன் சோக்கர்சோக்கர்களின் பூர்வீகம் வெஸ்டர்ன் என்றாலும், இந்திய கலாசாரத்திற்கேற்ப உருமாற்றப்பட்டுள்ளது. இந்திய பாணியை கொணட சோக்கர் நெக்லஸ்கள், வண்ணமயமான மற்றும் மதிப்புமிக்க ரத்தினங்கள் பதித்து தயாரிக்கப்படுகிறது. குந்தன், போல்கி மாடல்களில் இந்தியன் சோக்கர் கிடைக்கிறது. உயர் ரக ஆடைகளுக்கும், மணப்பெண்களுக்கும் கச்சிதமாக பொருந்தம்.முத்து சோக்கர்எளிமையான அழகை தரும் முத்துக்களாலான சோக்கர்களும் பேஷன் மிக்கவையே. நேர்த்திதான், முத்து சோக்கர்களின் சிறப்பம்சம். முத்துக்களுடன், கற்கள் பதிக்கப்பட்டும் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று அடுக்கு வரையிலான நெக்லஸ்களும் கிடைக்கின்றன. இவற்றை, பாரம்பரியம் மட்டுமின்றி வெஸ்டர்ன் ஆடைகளுடனும் 'மேட்ச்' செய்யலாம். குறிப்பாக, பிளைன் நிற ஆடைகளுக்கு அம்சமாக இருக்கும்.டாட்டூ சோக்கர்ஸ்ராக் ஸ்டார், பிரபலங்கள், மாடலிங் நபர்கள் மட்டுமே அணிந்து கொண்டிருந்த டாட்டூ சோக்கர்கள், இப்போது, கல்லுாரி பெண்களின் அவாய்ட் பண்ண முடியாத அணிகலன்களில் ஒன்றாகி விட்டது. பழங்குடியினரின் டாட்டூ போல, கருப்பு மெட்டல் அல்லது பிளாஸ்டிக்கால் வளைந்து, நெளிந்து காணப்படும் இவை, தனித்துவமிக்க நெக் டைட் நெக்லஸ். கேஷூவல் ஆடைகளான, டாப்ஸ், ஷார்ட் டிரஸ், டி - சர்ட்ஸ், குர்திகளுக்கு பொருத்தமாக இருக்கும்.ஆக்ஸிடைஸ்ட் சோக்கர்தற்போது டிரெண்டிலுள்ள பேஷன் நகைகளில், ஒன்று ஆக்ஸிடைஸ்ட் எனப்படும் வெள்ளி நிற நகை. ஆக்ஸிடைஸ்ட் சோக்கர்களின் அழகிய தோற்றம் காரணமாக, உலகம் முழுவதும் பேஷன் விரும்பிகளால் அதிகம் அணியப்படுகிறது. இவற்றில் பதிக்கப்பட்டுள்ள வெள்ளை முத்துக்களும், கற்களும், உங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். வெள்ளை நிற ஆடைகள் மற்றும் எத்தினிக் அவுட்பிட்டுகளுக்கு கச்சிதமாக இருக்கும்.அணிவதற்கு எளிதாகவும், அனைத்து வகைஆடைகளுக்கும் பொருத்தமாக இருப்பதே, பெண்களை சோக்கர் சொக்க வைக்க முக்கிய காரணம். உங்களுக்கு செட் ஆகும் சோக்கரை, இன்றேடிரை செய்து பாருங்கள் கேர்ள்ஸ்!தனித்து கெத்து காட்டும்!ஹெவி வெயிட், லைட் வெயிட், வெள்ளை மற்றும் கருப்பு பேப்ரிக் சோக்கர்கள், ரிப்பன், வெல்வெட், லெதர், ஜீன்ஸ் மெட்டல், ஆக்ஸிடைஸ்ட், போன்ற சோக்கர் நெக்லஸ்கள் சந்தையில் கிடைக்கின்றன. சோக்கர்களுடன் மற்ற எந்த நகைகளையும் அணிய வேண்டிய அவசியமில்லை. தனித்து நின்று கெத்து காட்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE