பாட்னா:''உங்களை துணை முதல்வராக்கியது யார்,'' என, பீஹார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம், முதல்வர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 125 இடங்களை கைப்பற்றி, தே.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.பீஹார் சட்டசபை கூட்டத்தின், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், நேற்று முன்தினம் துவங்கியது. எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், முதல்வர் நிதிஷ் குமார் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஊழல் குற்றச்சாட்டுகளையும் கூறினார்.
![]()
|
இதையடுத்து, கடும் கோபம் அடைந்த நிதிஷ் குமார், சட்டசபையில் பேசியதாவது:
எதிர்க்க்கட்சி தலைவர் தேஜஸ்வி, முட்டாள்தனமாக பேசுகிறார். தொடர்ந்து பொய்களை அள்ளி வீசுகிறார். அவருடைய தந்தை என் நண்பர் என்பதால், அவரது பேச்சை, பொறுமையுடன் கேட்டேன். அவரது தந்தையை முதல்வராக்கியது யார் என, தேஜஸ்விக்கு தெரியுமா?
உங்களை துணை முதல்வராக்கியது யார்? இவர் மீது, ஊழல் புகார்கள் அதிகளவில் வந்தது. இது பற்றி, முதல்வர் என்ற முறையில், தேஜஸ்வியிடம் கேட்டேன். அவர், எந்த விளக்கமும் அளிக்கவில்லை இதனால் தான், 2017ல், மெஹா கூட்டணியிலிருந்து விலகினேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE