துணை முதல்வராக்கியது யார்? தேஜஸ்வியிடம் நிதிஷ் கேள்வி

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பாட்னா:''உங்களை துணை முதல்வராக்கியது யார்,'' என, பீஹார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம், முதல்வர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார்.பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 125 இடங்களை கைப்பற்றி, தே.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.பீஹார் சட்டசபை கூட்டத்தின்,
துணை முதல்வராக்கியது யார்? தேஜஸ்வியிடம் நிதிஷ் கேள்வி

பாட்னா:''உங்களை துணை முதல்வராக்கியது யார்,'' என, பீஹார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம், முதல்வர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார்.

பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 125 இடங்களை கைப்பற்றி, தே.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.பீஹார் சட்டசபை கூட்டத்தின், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், நேற்று முன்தினம் துவங்கியது. எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், முதல்வர் நிதிஷ் குமார் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஊழல் குற்றச்சாட்டுகளையும் கூறினார்.


latest tamil news




இதையடுத்து, கடும் கோபம் அடைந்த நிதிஷ் குமார், சட்டசபையில் பேசியதாவது:
எதிர்க்க்கட்சி தலைவர் தேஜஸ்வி, முட்டாள்தனமாக பேசுகிறார். தொடர்ந்து பொய்களை அள்ளி வீசுகிறார். அவருடைய தந்தை என் நண்பர் என்பதால், அவரது பேச்சை, பொறுமையுடன் கேட்டேன். அவரது தந்தையை முதல்வராக்கியது யார் என, தேஜஸ்விக்கு தெரியுமா?
உங்களை துணை முதல்வராக்கியது யார்? இவர் மீது, ஊழல் புகார்கள் அதிகளவில் வந்தது. இது பற்றி, முதல்வர் என்ற முறையில், தேஜஸ்வியிடம் கேட்டேன். அவர், எந்த விளக்கமும் அளிக்கவில்லை இதனால் தான், 2017ல், மெஹா கூட்டணியிலிருந்து விலகினேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
28-நவ-202018:42:21 IST Report Abuse
Thirumal Kumaresan திருடர்கள் (லாலு குடும்பம் ) என தெரிந்தும் எவ்வளவு ஒட்டு போட்டு இருக்கிறார்கள். இவங்களை நம்பி இந்த நாடு கேவலம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-202017:26:43 IST Report Abuse
Lion Drsekar தேர்தல் முடிந்து விட்டது இனி இவர்கள் அவர்களுக்குள்ளேயே பேச ஆரம்பித்து விடுவார்கள், மக்களின் நிலை பழைய ,,, கதவை .......திறடி, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-நவ-202015:37:03 IST Report Abuse
Endrum Indian அய்யா நிதீஷு ஊழல் தான் என் வாழ்க்கை என்று வாழ்ந்த வாழும் லல்லுவிற்கு எப்போது ஆதரவு கொடுத்தாயோ அன்றே உன்மீது தார் கறை நன்றாக படிந்து விட்டது அதை போக்கவேண்டுமானால் இந்த ஆட்சியில் எந்த கறையும் படியாமல் ஆட்சி செய் நீ நல்லவன் என்று ஒத்துக்கொள்கின்றோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X