சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்கம்பியில் நடந்து சென்று மரங்களை அகற்றிய ஊழியர்

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தஞ்சாவூர்:மின் கம்பி மீது நடந்து சென்று, மரங்களை அகற்றிய மின்வாரிய ஊழியரை, கிராம மக்கள் பாராட்டினர்.'நிவர்' புயல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் மரங்கள் சாய்ந்தன. ஆடுதுறை - திருமந்துறை இடையே, உயர் மின்னழுத்தக் கம்பியில் மூங்கில் மரங்கள் சாய்ந்து, ஒன்றோடு ஒன்று பிணைந்து இருந்தன. அந்தப் பகுதியில் மின்சாரம்
மின்கம்பி,  மரங்கள், ஊழியர்

தஞ்சாவூர்:மின் கம்பி மீது நடந்து சென்று, மரங்களை அகற்றிய மின்வாரிய ஊழியரை, கிராம மக்கள் பாராட்டினர்.

'நிவர்' புயல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் மரங்கள் சாய்ந்தன. ஆடுதுறை - திருமந்துறை இடையே, உயர் மின்னழுத்தக் கம்பியில் மூங்கில் மரங்கள் சாய்ந்து, ஒன்றோடு ஒன்று பிணைந்து இருந்தன. அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டனர். கதிராமங்கலம் மின்வாரிய அலுவலக கள உதவியாளர் உலகநாதன், 44, நேற்று முன்தினம், மின்வாரிய பணியாளர்களுடன் அங்கு வந்தார்.

கை, கால்களில் எந்த பாதுகாப்பு உபகாரணமும் இல்லாமல், தலைக்கவசம் மட்டும் அணிந்தபடி, உயர் அழுத்த மின் கம்பியில், சர்க்கஸ்காரர் போல, 80 அடி துாரம் நடந்து, மின் கம்பிகளில் ஒன்றோடு ஒன்று சிக்கியிருந்த மூங்கில் மரங்களை, அரை மணி நேரமாக போராடி வெட்டினார். வெட்டப்பட்ட மூங்கில்மரங்களை அகற்ற, மற்ற மின்வாரிய பணியாளர்கள் கீழே இருந்து உதவினர். பின், உலகநாதன் மீண்டும் மின் கம்பியில் நடந்து, கீழே இறங்கினார். மீட்பு பணியில், உயிரை துச்சமாக மதித்து ஈடுபட்ட இவரின் செயலை, கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர். இதை, மொபைல் போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

'மின் ஊழியர் உலகநாதன் பணி பாராட்டத்தக்கது என்றாலும், அவரது உயிரும் முக்கியம். பாதுகாப்பு கருதி, உயரமான ஏணி மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் பாதுகாப்போடு பணியாற்ற வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
29-நவ-202014:30:32 IST Report Abuse
Indian அந்த வேலை சிரமம் என்று அவருக்கும் தெறியும், இருப்பினும் குடும்பத்தின் நிர்பந்தம் அவரை வேலை செய்ய வைக்கின்றது என்பதுதான் உண்மை
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் அவர் தற்காலிக பணியாளர் மின்வாரிய நிரந்தர ஊழியரில்லை எனவே விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கிடையாதுன்னு வழக்காட பல உயரதிகாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்டேட்மென்ட் விடுவார்கள் சம்பவத்தின்போது உயரதிகாரிகள் யாரும் அங்கு வந்திருக்க வாய்ப்பேயில்லை
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
28-நவ-202005:28:49 IST Report Abuse
RaajaRaja Cholan அவர் நல்ல மனது காரர் ஆனால் இது மின்சார வாரியத்துக்கு பெருமை யா., தன் ஊழியரை தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இவ்வாறு பனி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளிய மினசார வாரிய வெட்கம் வேதனை அவமானம் அசிங்க பட வேண்டும். பெருமை பட ஒன்றும் இல்ல. ஆதங்க படலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X