சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Added : நவ 28, 2020
Share
Advertisement
வேலுார்:பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புல்லுாரில், தமிழக பகுதியில் நுழைகிறது. வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக, 222 கி.மீ., பயணித்து, புதுப்பட்டினம் அடுத்த வயலுாரில்

வேலுார்:பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புல்லுாரில், தமிழக பகுதியில் நுழைகிறது. வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக, 222 கி.மீ., பயணித்து, புதுப்பட்டினம் அடுத்த வயலுாரில் வங்கக்கடலில் கலக்கிறது.

'நிவர்' புயல் மழையால், பல்வேறு பகுதிகளில் இருந்து, பாலாற்றில், தற்போது, 75 ஆயிரம் கன அடி நீர் ஓடுகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலாற்றில் வினாடிக்கு, 75 ஆயிரம் கன அடியாக வரும் தண்ணீர், மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், பாலாற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பாலாற்றை கடந்து செல்லும், 20 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 'நிவர்' புயலால், இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில், ஜவ்வாதுமலையில் அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பதிவானது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஜவ்வாதுமலையிலுள்ள பீமன் நீர்வீழ்ச்சியில், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல, ஆரணி நகரில் செல்லும், கமண்டல நாகநதி ஆற்றில், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X