சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மொபைல் கேம்' மோகத்தில் வாலிபர் தற்கொலை

Added : நவ 28, 2020
Share
Advertisement
திருச்சி:மும்பை மாநகராட்சியில் பணியாற்றியவர் மணி; சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி அழகு, மகன் ராதாகிருஷ்ணன், 18, மும்பையில் வசித்து வந்தனர். மணியின் சகோதரர் மகள் திருமணத்துக்காக, அழகும், ராதாகிருஷ்ணனும் ஒரு மாதத்துக்கு முன், திருச்சி, சத்தியமூர்த்தி நகர் வந்தனர். எப்போதும், மொபைல் போனில், 'கேம்' ஆடிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், சில நாட்களாக,

திருச்சி:மும்பை மாநகராட்சியில் பணியாற்றியவர் மணி; சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி அழகு, மகன் ராதாகிருஷ்ணன், 18, மும்பையில் வசித்து வந்தனர். மணியின் சகோதரர் மகள் திருமணத்துக்காக, அழகும், ராதாகிருஷ்ணனும் ஒரு மாதத்துக்கு முன், திருச்சி, சத்தியமூர்த்தி நகர் வந்தனர்.

எப்போதும், மொபைல் போனில், 'கேம்' ஆடிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், சில நாட்களாக, 'அப்செட்' ஆன நிலையில் இருந்துள்ளார்.இதனால், குடும்பத்தினர்கோவில், மசூதிக்கு அழைத்துச் சென்று, மந்திரித்து கயிறு கட்டினர். நேற்று காலை முதல், ராதாகிருஷ்ணனை காணவில்லை. குடும்பத்தார் தேடியபோது, சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள சங்கிலி ஆண்டவர் கோவிலுக்குள், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

மொபைல் போன் விளையாட்டில் மூழ்கிய ராதாகிருஷ்ணன், விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X