சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே டூவீலர்கள் மோதிக்கொண்டதில் இருவர் பலியாயினர். பெண் காயமடைந்தார்.
மதுரை மாவட்டம், சிலைமான் சுந்தரபாண்டி 37. இவரது மனைவி காளீஸ்வரி 30. இருவரும் டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) நவ.,26 அன்று திருப்புவனம் அருகே அங்காடிமங்கலத்தில் நடந்த திருமணத்திற்கு சென்று விட்டு இரவு 9:45 மணிக்கு டூவீலரில் மீண்டும் சிலைமான் திரும்பினர்.
சிலைமானில் இருந்து திருப்புவனத்திற்கு மற்றொரு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கழுகேர்கடை முஷ்ரப் 19, சென்றார். இருவரது டூவீலரும் மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் மணலுார் அருகே நேருக்கு நேர் மோதியதில் சுந்தரபாண்டியன் 37, முஷ்ரப் 19 இருவரும் பலியாகினர். காளீஸ்வரி 30 காயமுற்றார். திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE