பொது செய்தி

தமிழ்நாடு

60 அடியை கடந்தது வைகை அணை நீர்மட்டம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி:தேனிமாவட்டம் வைகை அணை நீர் மட்டம் 60 அடியை கடந்தது.சில நாட்களாக வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வைகை அணைக்கு அதிக நீர் வரத்து ஏற்பட்டது. ஏற்கனவே பெரியாறு அணையில் இருந்து வந்த நீர், மூல வைகை நீரால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கான நீர் வரத்தும் குறைவானது. நவ.21-ல் அணை நீர் மட்டம் 56.46 அடியாக

ஆண்டிபட்டி:தேனிமாவட்டம் வைகை அணை நீர் மட்டம் 60 அடியை கடந்தது.சில நாட்களாக வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வைகை அணைக்கு அதிக நீர் வரத்து ஏற்பட்டது. ஏற்கனவே பெரியாறு அணையில் இருந்து வந்த நீர், மூல வைகை நீரால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கான நீர் வரத்தும் குறைவானது. நவ.21-ல் அணை நீர் மட்டம் 56.46 அடியாக இருந்தபோது முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.

இதனால் அணை நீர் மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து நேற்று காலை 60.76 அடியானது.(மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1518 கன அடியாக இருந்தது. மீண்டும் பாசனத்திற்காக வினாடிக்கு 1200 கன அடி வீதம் நேற்று திறந்து விடப்பட்டது. குடிநீருக்காக வழக்கம்போல் வினாடிக்கு 69 கன அடிநீர் வெளியேறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X