பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை: மதுரையில் நேற்று (நவ. 27) இரவு 9 மணியளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.கடந்த 26ம் தேதி அதிகாலை நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. ஆனால், மதுரை மாவட்டத்தில் புயல் கரை கடந்த போது மழைப் பொழிவு இல்லை.இந்நிலையில் நேற்று இரவு (நவ.,27) இரவு 9 மணியளவில்
madurai, rain, nivar, salem, மதுரை, கனமழை, நிவர், புயல், சேலம் மாவட்டம்

மதுரை: மதுரையில் நேற்று (நவ. 27) இரவு 9 மணியளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

கடந்த 26ம் தேதி அதிகாலை நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. ஆனால், மதுரை மாவட்டத்தில் புயல் கரை கடந்த போது மழைப் பொழிவு இல்லை.

இந்நிலையில் நேற்று இரவு (நவ.,27) இரவு 9 மணியளவில் மதுரை நகரின் பெரும்பாலானா பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பகல் வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு பெய்த மழை குளிர்ச்சியை கொடுத்தது.


latest tamil news


நிவர் புயல் தற்போது ஆந்திராவில் நிலைகொண்டுள்ளதையடுத்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
28-நவ-202017:22:28 IST Report Abuse
Naagarazan Ramaswamy மொட்டையாய் கொட்டித்தீர்த்தது என்பதற்கு மாறாக 10 cm 15 cm மழை பெய்தது என்றல் அர்த்தம் இருக்கும்.
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
28-நவ-202014:07:50 IST Report Abuse
ANTONYRAJ கன மழை என்று கேள்விப் பட்ருக்கேன்,ஆனால் நேற்றுதான் மதுரையில் அதை பார்த்தேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X