கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
மதுரை : 'வங்கிகளில், 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன், வழக்கறிஞர் சங்கர் முரளி ஆஜராகி, முறையிட்டதாவது: பெரம்பலுாரைச் சேர்ந்த ஜெயராஜ், திருச்சியில் ஒரு வங்கியில்
ஏழைகள், வங்கிகள், தொந்தரவு, ஐகோர்ட், அதிருப்தி

மதுரை : 'வங்கிகளில், 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன், வழக்கறிஞர் சங்கர் முரளி ஆஜராகி, முறையிட்டதாவது: பெரம்பலுாரைச் சேர்ந்த ஜெயராஜ், திருச்சியில் ஒரு வங்கியில் வீட்டுக் கடன், 15 லட்சம், மற்றொரு கடன், 50 லட்சம் ரூபாய் வாங்கினார். இதற்கு ஈடாக, அவரது விவசாய நிலம், அடமானமாக பெறப்பட்டது.

இதில், வீட்டுக் கடனுக்கு, 18 லட்சம், மற்ற கடனுக்கு, 25 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. சில காரணங்களால், மேலும் கடனை செலுத்த முடியவில்லை. இரு கடனுக்கும் அசல், வட்டி, 4 கோடி ரூபாய் செலுத்துமாறு வங்கி தரப்பு தெரிவித்தது. கடனுக்கு ஈடாக, விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில், ஒரு நிறுவனம் மூலம் வங்கி ஈடுபட்டது. இதற்கு எதிராக ஜெயராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதித்து, வங்கியில், 75 லட்சம் ரூபாய், ஜெயராஜ் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 75 லட்சத்திற்கான, 'டிடி'யை, வங்கியில் செலுத்த ஜெயராஜ் சென்றார். அதை வாங்க மறுத்த வங்கி தலைமை மேலாளர் துாக்கி வீசினார். இவ்விவகாரத்தில், தகுந்த நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


latest tamil news


வங்கி தரப்பில், 'இது தவறான தகவல்' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது: கடனை வசூலிக்க ஏஜன்சிகளை வைத்து, கடன் வாங்கியவர்களை தொந்தரவு செய்கின்றனர். இதனால், பலர் தற்கொலையை நாடுகின்றனர். கடனுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. கடன் வசூலிப்பதை, தனியார் ஏஜன்சிகளிடம் ஒப்படைக்க, எதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கி அனுமதி வழங்குகிறது.

'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் சலுகை அளிக்கப்படுகிறது. 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஆனால், ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர். விதிமுறைகளை பின்பற்றி, கடனை வசூலிக்க வேண்டும். நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோர வேண்டும். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர்களைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு பதில், கடன் வழங்குவதை தவிர்க்கலாம். இவ்வாறு நீதிபதிகள், அதிருப்தியை வெளியிட்டனர்.

பின், நீதிபதிகள், 'வங்கியின் தலைமை மேலாளர் மஞ்சுளா டிச., 1ல் ஆஜராக வேண்டும். அவர், 'டிடி'யை வாங்க மறுத்தது தொடர்பாக, வங்கியின் கண்காணிப்பு கேமரா பதிவை சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
28-நவ-202019:09:36 IST Report Abuse
KavikumarRam மதுரை நீதிமன்றம் ஒரு அரசியல் கட்சி போல் ஸ்டேட்மென்ட் விடுகிறது. நீதிபதிகளுக்கு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்த்து நீதிவழங்குவது வேலையல்ல. யார் தவறு செய்திருக்கிறார்கள் என்று விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்குவது தான் அவர்கள் வேலை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-நவ-202017:39:47 IST Report Abuse
Bhaskaran வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரிகள் மனிதர்களாக நடத்துவதில்லை .ஓய்வூதியம் பெற வாழ்நாள் சான்றிதழ் வங்கியில் தரவில்லை தபால் அலுவலகத்தில் 70 ரூபாய் செலவு செய்து வாங்க வேண்டியதாகைவிட்டது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
28-நவ-202018:31:24 IST Report Abuse
 Muruga Velவங்கி தான் வாழ்நாள் சான்றிதழ் தர வேண்டுமென்பதில்லை ..எழுபது ரூபாய் செலவழிப்பதால் குறைந்தா பொய் விடுவீர்கள் ..எத்தனையோ நபர்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தானே உங்கள் பென்ஷன் கிடைக்கிறது ..வங்கிகளுக்கு போனால் பாஸ் புக் என்ட்ரி போட சீனியர் சிட்டிசன் கும்பல் அதிகம் ..பென்ஷன் நாள் அன்றும் இவுங்க கும்பல் தான் .....
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
28-நவ-202018:41:45 IST Report Abuse
Bhaskaranஇது நாங்கள் கட்டியுள்ள ஈ.பி.எப். பணத்தில் கொடுக்கப்படும் மிகக்குறைந்த ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் கூட பெரும்பாலானவர்க்கு கிடைப்பதில்லை. உயர்நீதிமன்றங்கள் ஆணை செய்தும் மத்திய அரசு ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. பலரைப்போல் மத்திய அல்லது மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்று நாற்பது அல்லது ஐம்பது ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதாக இருந்தால் எழுபது என்ன ஆண்டிற்கொருமுறை அதிகமே கொடுக்கலாம். ஏழைத்தொழிலார்கள் ஓய்வூதியத்தில் எவ்வளவு தான் கொடுக்க முடியும் ஐயா...
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
28-நவ-202020:05:32 IST Report Abuse
Darmavan70 ரூபாயும் உடலலைச்சலும் ஒய்வு பெற்றவர்களுக்கு பெரிதுதான் மனிதாபத்தோடு பேசவேண்டும்....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29-நவ-202006:23:42 IST Report Abuse
 Muruga Velபிள்ளைகளுக்கு அக்கறை இருந்தால் இப்படி அலைய தேவையில்லை .....
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
28-நவ-202017:20:38 IST Report Abuse
மு. செந்தமிழன் தனது விவசாய நிலத்தை அடமானம் வைத்து அறுபத்தி ஐந்து லட்சம் கடன் வாங்க தகுதியானவர் இந்தியாவில் ஏழையா? நீதி மன்றம் சற்று யோசிக்க வேண்டும்
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
28-நவ-202020:07:26 IST Report Abuse
Darmavanவிவசாயம் வியாபார சென்டர் இல்லை.65 லட்சத்தில் அவனுக்கு என்ன வருமானம் வரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X