லாலுவின் ஜாமின் மனு விசாரணை: உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

Added : நவ 28, 2020
Share
Advertisement
ராஞ்சி:மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பீஹார் முன்னாள் முதல்வருமா லாலு பிரசாத் யாதவ் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது மாட்டு தீவன ஊழல்

ராஞ்சி:மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பீஹார் முன்னாள் முதல்வருமா லாலு பிரசாத் யாதவ் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது மாட்டு தீவன ஊழல் என்று அழைக்கப்படுகிறது. இதில் நான்காவது வழக்கான டும்கா மாவட்ட கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2018ல் உத்தரவிட்டது.

இந்த வழக்கை தவிர மற்ற மூன்று மாட்டு தீவன ஊழல் வழக்குகளில் லாலுவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் டும்கா கருவூல வழக்கில் ஜாமின் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு மனு செய்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது 'இந்த வழக்கில் லாலு ஒரு நாள் சிறை தண்டனை கூட அனுபவிக்கவில்லை. எனவே அவருக்கு ஜாமின் வழங்க கூடாது' என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்குமாறு பா.ஜ. - எம்.எல்.ஏ. லாலன் குமார் பஸ்வானிடம் தொலைபேசி வாயிலாக குதிரை பேரத்தில் லாலு ஈடுபட்ட 'ஆடியோ' வெளியானது.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனை இயக்குனரின் பங்களாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு இந்த சர்ச்சை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 'அவரை பிர்சா முண்டா சிறையில் உடனடியாக அடைக்க வேண்டும்' என மாநில பா.ஜ. தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அச்சத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,

பீஹாரைச் சேர்ந்த பா.ஜ. - எம்.எல்.ஏ. லாலன் குமார் பஸ்வான் சமீபத்தில் லாலு பிரசாத் நடத்திய குதிரை பேர உரையாடலை வெளிப்படுத்தினார்.இதையடுத்து தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் உடல் அளவிலும் மனதளவிலும் லாலுவின் ஆட்களால் துன்புறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சட்டசபையில் அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X