புதுடில்லி:கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு நடத்தவுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.நம் நாட்டில் தடுப்பூசியை தயாரிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏழு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அவற்றில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் செயல்பட்டு வரும் 'சீரம்' நிறுவனம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் செயல்பட்டு வரும் 'சைடஸ் கேடிலா' மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE