மழை நீர் தேங்கி அவதி

Added : நவ 28, 2020
Share
Advertisement
கேத்தனுார் மின் வாரிய அலுவலகம் முன் உள்ள தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தியாகி பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.- கிருஷ்ணன், கேத்தனுார்.பார்க்கிங்கால் அவதிஅவிநாசி, மேற்கு ரத வீதியில் வாகனங்கள் தாறுமாறாக பார்க்கிங் செய்யப்படுகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் கண்காணிக்க வேண்டும்.- ரவிச்சந்திரன், அவிநாசி.துார்

கேத்தனுார் மின் வாரிய அலுவலகம் முன் உள்ள தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தியாகி பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.- கிருஷ்ணன், கேத்தனுார்.பார்க்கிங்கால் அவதிஅவிநாசி, மேற்கு ரத வீதியில் வாகனங்கள் தாறுமாறாக பார்க்கிங் செய்யப்படுகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் கண்காணிக்க வேண்டும்.- ரவிச்சந்திரன், அவிநாசி.துார் வாராத குளம்அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் கிராமத்தில் மிகப் பெரிய பரப்பளவில் குளம், குட்டைகள் உள்ளன. இவை துார்வாரப்படாமல் மழை நீர் தேங்க வழியின்றி உள்ளது.- பரமசிவம், புதுப்பாளையம்.தெரு நாய் தொல்லை அதிகம்திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லுார், வி.ஐ.பி., கார்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- புஷ்பா, வி.ஐ.பி., கார்டன்.குழி தோண்டியதால் திணறல்திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எஸ்.ஆர். மருத்துவமனை அருகே கால்வாய் கட்ட குழி தோண்டப்பட்டது. பணியும் நடக்காததால், குழியும் மூடாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- சந்திரசேகரன், கொங்கு மெயின் ரோடு.சரக்கு லாரிகளால் அவதிதிருப்பூர், பேப்ரிகேஷன் ரோட்டில் உள்ள பாலம் மீது நீண்ட துாரத்துக்கு சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாலம் மீது வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறாக உள்ளது.- சுந்தரராஜன், லட்சுமி நகர்.'சிக்னல்' பழுதால் சிக்கல்திருப்பூர் - அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னல் பழுதாகியுள்ளது. நேரம் மாறாமல், சிவப்பு விளக்கு நீண்ட நேரம் எரிவதால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். பழுதை சீரமைக்க வேண்டும்.- வி.தங்கராஜ், அவிநாசி ரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X