மதுரை:மதுரை வழியாக நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில்கள் டிச., முதல் வாரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
நாகர்கோவிலில் டிச., 7 முதல் திங்கள்,செவ்வாய்,புதன், வெள்ளியில் காலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06340) மதுரையில் காலை 11:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:15 மணிக்கு மும்பை செல்லும். மறுமார்க்கத்தில் மும்பையில் டிச., 8 முதல் செவ்வாய், புதன், வியாழன், சனியில் இரவு 8:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06339) முறையே வியாழன், வெள்ளி, சனி, திங்கள் காலை 10:20 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், நாங்குனேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்துார், காட்பாடி, சித்துார், மதனப்பள்ளி ரோடு, கதிரி, தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ரெய்ச்சூர், யாட்கிர், கலபுரகி,சோலாப்பூர், குர்ட்வாடி, டான்ட், புனே, கல்யாண், தானே, தாதர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை, நான்கு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை, பத்து இரண்டாம் வகுப்பு படுக்கை, இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை, ஒரு சமையல் பெட்டிகள் இணைக்கப்படும். மும்பை செல்லும் சிறப்பு ரயில் (06340) நாமக்கல், நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (06339) கர்ஜாட் ஸ்டஷன்களில் நிற்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE