அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் குறித்து பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை:வருமான வரி முன்னாள் அதிகாரி சரவணக்குமார் பேட்டி

Added : நவ 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:''ஊழல் குறித்து பேச விசாரணை கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க.,வுக்கு என்றைக்கும் தகுதியில்லை,'' என, மதுரையில் பா.ஜ.,வை சேர்ந்த வருமான வரி முன்னாள் அதிகாரி சரவணக்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அறிவித்ததன் மூலம் ஊழல் குறித்து பேச பா.ஜ., தேசிய முன்னாள் தலைவர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சமீபத்தில்

மதுரை:''ஊழல் குறித்து பேச விசாரணை கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க.,வுக்கு என்றைக்கும் தகுதியில்லை,'' என, மதுரையில் பா.ஜ.,வை சேர்ந்த வருமான வரி முன்னாள் அதிகாரி சரவணக்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அறிவித்ததன் மூலம் ஊழல் குறித்து பேச பா.ஜ., தேசிய முன்னாள் தலைவர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. அவரால் பா.ஜ., மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. இதிலிருந்து பா.ஜ., அரசு பிரதமர் மோடி தலைமையில் நேர்கோட்டில் செல்கிறது என்பதை அறியலாம்.

மேலும் சர்க்காரியா கமிஷனால் ஊழல் நடந்ததாக தி.மு.க., குற்றச்சாட்டிற்குள்ளாகியுள்ளது. முந்தைய மத்திய காங்., கூட்டணி அரசில் இடம் பெற்ற தி.மு.க.,வின் 2 ஜி ஊழலை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே ஊழல் குறித்து பேச தி.மு.க.,வுக்கு என்றைக்குமே தகுதியில்லை.வாரிசுகள் அரசியலில் இருப்பது வாரிசு அரசியல் இல்லை. ஆனால் வாரிசுகள் கட்சியையே (கம்பெனியை) வளைக்க பார்ப்பது தான் வாரிசு அரசியல்.

பா.ஜ.,வில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம். தி.மு.க.,வில் கருணாநிதி, அவருக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதி, இன்பநிதி மட்டுமே தலைவராக முடியும். பா.ஜ.,வில் 10 ஆண்டுகளுக்கு பிறகு யார் தலைவர் ஆவர் என தற்போது கூற முடியாது. ஆனால் தி.மு.க.,வில் இன்பநிதி தலைவராவார் என கூறி விடலாம். இதுதான் வாரிசு அரசியல் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dinamalar poiyen - dinamalr,இந்தியா
28-நவ-202011:55:33 IST Report Abuse
dinamalar poiyen நீர் இப்படி கூவுவதை பார்த்தால் வருமான வரி துறையில் நிறைய வருமானம் பார்த்து இருப்ப போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X