அவிநாசி:'கிராம ஊராட்சி மக்கள், வறுமையில்லாத, தன்னிறைவு வாழ்க்கை வாழ, வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்' என, பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையின், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில், மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்ட பயிற்சி வகுப்பு, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது.ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், தலைமை வகித்து பேசுகையில்,''கிராம ஊராட்சிகளில் குடிநீர், ரோடு, தெரு விளக்கு போன்ற பணிகளை செய்வது, இயல்பாகவே நடந்துவிடும். அதையும் தாண்டி, ஒவ்வொரு மக்களும் வறுமையில்லாமல், பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவதற்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு, கிராம ஊராட்சி தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.ஒன்றிய குழு துணை தலைவர் பிரசாத்குமார், பி.டி.ஓ.,க்கள் மனோகரன் (வளர்ச்சி), ஹரிஹரன் (ஊராட்சி) பேசினர். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட வட்டார அணி தலைவர் சண்முகம், செயல் அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர், ஆலோசனை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE