பொது செய்தி

தமிழ்நாடு

லட்சக்கணக்கில் மரக்கன்று... லட்சியம் நிறைவேறும் தருணம்!

Added : நவ 28, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஊரடங்கு நேரத்திலும், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் ஓயாமல் உழைத்ததால், 79 நிகழ்ச்சி மூலம் இதுவரை, 1.92 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர்' என்ற பசுமை திட்டம், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து கோடி ரூபாய் வரையிலான, பெரும் பொருட்செலவில் செயல்படுத்தப்படுகிறது. நவீன இயந்திரங்கள், தேனீக்களை போன்ற பணியாளர், கண்காணிப்பாளர் என, சரியான
 லட்சக்கணக்கில் மரக்கன்று... லட்சியம் நிறைவேறும் தருணம்!

திருப்பூர்:ஊரடங்கு நேரத்திலும், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் ஓயாமல் உழைத்ததால், 79 நிகழ்ச்சி மூலம் இதுவரை, 1.92 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர்' என்ற பசுமை திட்டம், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து கோடி ரூபாய் வரையிலான, பெரும் பொருட்செலவில் செயல்படுத்தப்படுகிறது. நவீன இயந்திரங்கள், தேனீக்களை போன்ற பணியாளர், கண்காணிப்பாளர் என, சரியான கட்டமைப்புடன், இத்திட்டம் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.இதுவரை, எட்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது; ஆறாவது திட்டம், இரண்டு லட்சம் என்ற இலக்குடன் துவங்கியது. ஊரடங்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திருந்த போதும், இத்திட்டக்குழுவினர் முடங்கவில்லை. மளமளவென மரக்கன்றுகளை நட்டனர்; தற்போது, 1.92 லட்சம் என்ற உச்சநிலையை எட்டிப்பிடித்துள்ளது.திட்டத்தின், 79வது நிகழ்ச்சி, பல்லடம் மேட்டுக்கடை, வேலப்பகவுண்டன்பாளையத்தில் நடந்தது. பெரியதோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், நில உரிமையாளர் நாகசுப்ரமணியன், முத்துசாமி சவுந்தரி குடும்பத்தினர் பங்கேற்றனர்.இதில், நாவல் -1,380, இலுப்பை -720, கருவேல் -700, வேம்பு -590, தான்றிக்காய் -250, புளி -150, பூவரசு -100, தேக்கு -50, மலைவேம்பு -50 என, 3,990 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் கூறுகையில், 'ஆறாவது திட்டத்தில் இதுவரை, 1.90 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விரைவில், இலக்கை தாண்டிச்சென்று, மீண்டும் சாதனையை நிலைநாட்டும் சூழல் உருவாகியுள்ளது. தரிசாய் கிடக்கும் நிலத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்த்து, நிரந்தர வருவாய் பெற, 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X