அவிநாசி:நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள பாலத்தின் அடியில் தேங்கும் மழைநீரால், சுகாதாரகேடு ஏற்படும் வாய்ப்புள்ளது.தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் இடையே, ஆங்காங்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வழிந்தோடி செல்வதற்கேற்ப, வடிகால் வசதியுடன் கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், அப்பகுதியை சுற்றியுள்ள இறைச்சிக்கடைக்காரர்கள், பாலத்தின் அடியில் இறைச்சிக்கழிவு, குப்பைகளை கொட்டுகின்றனர். சில பனியன் நிறுவனத்தினரும் குப்பை, கழிவுகளை கொட்டுகின்றனர்.இதனால், பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் வழிந்தோடி வரும் வெள்ளம், பாலத்தின் அடியில் தேங்கி நிற்கிறது. பெருமழை சமயங்களில் தேங்கும் வெள்ளம் வெளியேறி, சேதம் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.எனவே, பாலம் அடைப்பு ஏற்பட காரணமாக, அங்கு குப்பை கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அடைபட்டுள்ள பாலத்தை சுத்தம் செய்வது மழைக்காலத்தில் அவசியமாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE