பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் கவர் விற்பனை: ரூ.13,500 அபராதம் விதிப்பு

Added : நவ 28, 2020
Share
Advertisement
பல்லடம்:பிளாஸ்டிக் கவர் விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.பல்லடம் நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், திருச்சி ரோடு, மாணிக்காபுரம் பிரிவு அருகே உள்ள முட்டை கடை ஒன்றில், விற்பனைக்காக வைத்திருந்த, 20 கிலோ பிளாஸ்டிக்கவர், டம்ளர், தட்டு
 பிளாஸ்டிக் கவர் விற்பனை: ரூ.13,500 அபராதம் விதிப்பு

பல்லடம்:பிளாஸ்டிக் கவர் விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.பல்லடம் நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், திருச்சி ரோடு, மாணிக்காபுரம் பிரிவு அருகே உள்ள முட்டை கடை ஒன்றில், விற்பனைக்காக வைத்திருந்த, 20 கிலோ பிளாஸ்டிக்கவர், டம்ளர், தட்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.விதிமுறை மீறி விற்பனை செய்யப்பட்டதாக கூறி, கடை உரிமையாளருக்கு, 13,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்கினாலோ அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X