திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை, அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில், பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, இன்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரிக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்க்க, கண்கொள்ளா காட்சியாக உள்ளது.கொரோனா ஊரடங்கால், இன்று முதல், 30 வரை மூன்று நாட்களுக்கு, வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வரவும், 29, 30 ஆகிய இரண்டு நாட்கள், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE