கோவை:கோவையில் முதல் கட்ட வாக்காளர் சிறப்பு முகாமில், 66 ஆயிரத்து 775 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் மேற்பார்வையாளர் கருணாகரன் தலைமையில், ஆய்வு கூட்டம் நடந்தது.
அவர் கூறியதாவது:கோவையில் கடந்த, 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். தொடர்ந்து நடந்த திருத்த முகாம்கள் மூலம், பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 66 ஆயிரத்து 775 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்விண்ணப்பங்கள் முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்படும். கவுண்டம்பாளையம், தொண்டாமுத்துார், மற்றும் சூலுார் ஆகிய தொகுதிகளில் மக்கள் தொகை விகிதத்தை ஒப்பிடுகையில், வாக்காளர் விகிதம் அதிகமாக உள்ளது. இத்தொகுதியில், இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய முறையில் பதிவுகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டர் ராஜாமணி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ராமதுரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE