'நிவர் புயலால், பொதுமக்கள் பாதித்துள்ளதால், தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்' என்ற, தி.மு.க, இளைஞர் அணி செயலர் உதயநிதி வேண்டுகோளை மீறி, அவரது பிறந்த நாளை மேளதாளத்துடன், இளைஞர் அணியினர் தடபுடலாக கொண்டாடினர்.
உதயநிதி, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'என் பிறந்தநாளை ஒட்டி, போஸ்டர்கள் ஒட்டுவது,ஆடம்பர பேனர்கள் வைப்பது போன்றவற்றில்,இளைஞரணியினர் ஈடுபட வேண்டாம். நிவர் புயல் பாதித்த பகுதிகளில், நிவாரணம், மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை காற்றில் பறக்கவிட்ட இளைஞர் அணியினர், தடபுடலாக, பிறந்த நாளை கொண்டாடினர்.உதயநிதி தன் பிறந்தநாளை ஒட்டி, ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.பின், அறிவாலயத்திற்கு சென்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை வீட்டில், கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.உதயநிதி வீட்டிற்கு, காலை, 9:௦௦ மணிக்கு, இளைஞரணி நிர்வாகிகள் திரண்டு வந்தனர். ஆனால், பகல், 12.15 மணிக்கு தான் உதயநிதி வந்தார்.
அப்போது, மேளதாளங்கள் இசைத்து, கேக் வெட்டி, ஆட்டம் பாட்டத்துடன் தடபுடலாக, அவரின் பிறந்த நாளை கொண்டாடினர்.புயல், மழை வெள்ள நிவாரணபணிகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்ற, உதயநிதியின் வேண்டுகோளை புறக்கணித்து, அவரது பிறந்தநாளை கொண்டியதால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்திஅடைந்தனர்.
- --நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE