பாலக்காடு:தமிழில் ஓட்டு சீட்டு அச்சிட கோரி, கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவ., 30க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கேரள மாநில தமிழ்பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் பேச்சிமுத்து, எர்ணாகுளம் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
மனுவில், பாலக்காடு மாவட்டம்,சித்துார் தாலுகா தத்தமங்களம் நகராட்சி, மற்றும் நெல்லி பிள்ளி, புதுநகரம், கொடுவாயூர், கொல்லங்கோடு, நெல்லியாம்பதி உள்ளிட்ட, 16 ஊராட்சி பகுதிகளில், தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால், தேர்தலின் போது, வாக்காளர் பட்டியல், ஓட்டு சீட்டில், தமிழ் மொழியில் அச்சிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு எர்ணாகுளம் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் கமிஷன் மற்றும் பேச்சிமுத்து தரப்பு வக்கீல் ஆஜராகி வாதாடினர். விசாரணை நவ., 30 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE