ஊட்டி:'ஊட்டி டீ' விற்பனையை, 500 டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் 'இன்கோசர்வ்' கட்டுப்பாட்டில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. சிறு விவசாயிகள் பலனடையும் வகையில், அரசே பசுந்தேயிலை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக, பாக்கெட் தேயிலைத் துாள் விற்பனை செய்து வருகிறது.
மாநிலம் முழுவதும், ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, 100 கிராம் பொட்டலத்துக்கு, 22 ரூபாய் வீதம் விற்கப்பட்டு வருகிறது. பொது வினியோக திட்டத்துக்கு மாதம், 400 டன், 'ஊட்டி டீ' வினியோகிக்கப்படுகிறது.
'இன்கோசர்வ்' சேர்மன் சிவக்குமார் கூறுகையில்,''தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், சிறு விவசாயிகள், இலை முழுவதையும் கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். இதனால், உற்பத்தியை அதிகரித்து வருவதால், 'ஊட்டி டீ' மாத விற்பனையை, 500 டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE