சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்று நடக்கிறது ஆர்ப்பாட்டம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவதையடுத்து, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள், இன்று சிறுமுகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.சிறுமுகை விஸ்கோஸ் ஆலை இடித்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், ஆலை வளாகத்தில், முள் மரங்கள் வளர்ந்து, வனம் போல் காட்சி அளிக்கிறது. கூத்தாம்மண்டி வனப்பகுதியில் இருந்து, ஆற்றை கடந்து வரும் யானைகள் விஸ்கோஸ் ஆலை

மேட்டுப்பாளையம்:யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவதையடுத்து, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள், இன்று சிறுமுகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.சிறுமுகை விஸ்கோஸ் ஆலை இடித்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், ஆலை வளாகத்தில், முள் மரங்கள் வளர்ந்து, வனம் போல் காட்சி அளிக்கிறது. கூத்தாம்மண்டி வனப்பகுதியில் இருந்து, ஆற்றை கடந்து வரும் யானைகள் விஸ்கோஸ் ஆலை இடத்தில், நிரந்தரமாக தங்கியுள்ளன. இந்த யானைகள் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், வாழைகளை சேதப்படுத்தி வருகின்றன.இதனால், இப்பகுதிகளில் தினமும், 100க்கணக்கான வாழை மரங்களை, யானைகள் சேதப்படுத்துகின்றன. நேற்று முன்தினம் இரவு, விஸ்கோஸ் ஆலை வளாகத்தில் காவல் பணியில் இருந்தவரின் சைக்கிளை, யானைகள் மிதித்து சேதப்படுத்தியது. அங்கிருந்த வாட்ச்மேன் தப்பினார்.யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவதை தடுக்கவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழக விவசாயிகள் சங்கமும், பவானி ஆற்று நீர்ப் பாசன சங்கமும் இணைந்து, சிறுமுகை தியேட்டர் மேடு அருகே, இன்று காலை, 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X