பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேக கோலாகலம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே, மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், பழமையான பெரிய ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தர்மபுரியை பூர்வீகமாகக் கொண்ட படையாட்சி சமுதாய மக்கள், 500 ஆண்டுகளுக்கு முன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்காக கோவைக்கு வந்தனர். அப்போது தங்களுடன் எடுத்து வந்த குலதெய்வமான பெரிய ஆண்டவரை வைத்து வழிபட்டனர். குலதெய்வ மக்கள் ஒன்று சேர்ந்து, பழமையான
 பெரிய ஆண்டவர் கோவிலில்  கும்பாபிஷேக கோலாகலம்

அன்னுார்:அன்னுார் அருகே, மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், பழமையான பெரிய ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தர்மபுரியை பூர்வீகமாகக் கொண்ட படையாட்சி சமுதாய மக்கள், 500 ஆண்டுகளுக்கு முன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்காக கோவைக்கு வந்தனர். அப்போது தங்களுடன் எடுத்து வந்த குலதெய்வமான பெரிய ஆண்டவரை வைத்து வழிபட்டனர். குலதெய்வ மக்கள் ஒன்று சேர்ந்து, பழமையான பெரியாண்டவருக்கு, பல லட்ச மதிப்பில், கோவில் கட்டியுள்ளனர்.இதையடுத்து, கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் திருமுறை பாராயணத்துடன் துவங்கியது. மாலையில் எண்வகை மருந்து சாத்துதலும், முதற்கால யாகசாலை பூஜையும் நடந்தது.நேற்று அதிகாலை, இரண்டாம் கால பூஜையும், புனித நீர் அடங்கிய கலசங்கள், யாகசாலையை சுற்றி வந்து கோபுரத்துக்கு கொண்டு செல்லுதலும் நடந்தது. காலை 10:00 மணிக்கு, விமானத்துக்கும், மூலவருக்கும், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது,கும்பாபிஷேகத்தின் போது, கருடன்கள் கோவில் மேல் சுற்றிப் பறந்தது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X