அன்னுார்:தமிழக சட்டசபை சபாநாயகரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தனபால் நாளை காலை 10:00 மணிக்கு, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செந்தாம் பாளையத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.அங்கு, ஒரு கோடியே 14 லட்சம் மதிப்பில், புதிய சாலை பணியையும், ஒரு கோடியே, 26 லட்சம் மதிப்பில், மரக்கன்றுகள் நடும் பணியையும் துவக்கி வைக்கிறார். 11:00 மணிக்கு, அன்னுார் பயணியர் மாளிகையில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்; கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். 'கோரிக்கை உள்ள பொதுமக்கள், மனு அளிக்கலாம்' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE