பொது செய்தி

தமிழ்நாடு

90 வயது... ஆனாலும் ‛இளைஞர்'

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
நான்கு விரல்களை மடக்கி, பெரு விரலை உயர்த்தி, சார் லிப்ட்... என்று, பல சாலையோரங்களில் அரங்கேறும் காட்சிகளை அனுதினமும் காண முடியும். லிப்ட் கேட்போர், வயதானவர்களாக இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் அதிகம். அவர்கள் செல்லும் துாரம், சில கி.மீ., துாரம் தான் இருக்கும். இருந்தாலும், நடப்பதற்கு அவ்வளவு சிரமம்.அருகில் இருக்கும் கடைக்கு சென்றாலும் கூட, இரு சக்கர வாகனத்தை 'ஸ்டார்ட்'
90 வயது... ஆனாலும்  ‛இளைஞர்'

நான்கு விரல்களை மடக்கி, பெரு விரலை உயர்த்தி, சார் லிப்ட்... என்று, பல சாலையோரங்களில் அரங்கேறும் காட்சிகளை அனுதினமும் காண முடியும்.

லிப்ட் கேட்போர், வயதானவர்களாக இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் அதிகம். அவர்கள் செல்லும் துாரம், சில கி.மீ., துாரம் தான் இருக்கும். இருந்தாலும், நடப்பதற்கு அவ்வளவு சிரமம்.அருகில் இருக்கும் கடைக்கு சென்றாலும் கூட, இரு சக்கர வாகனத்தை 'ஸ்டார்ட்' செய்வது, நம்மவர்களின் பழக்கமாக மாறிப் போயிருக்கிறது. இதற்கேற்றார் போல் வாசற்படியிலேயே காத்திருக்கிறது வாகனம்.

உட்கார்ந்த இடத்தில் இருந்து சடாரென எழுந்திருத்தால், மூட்டு வலிக்கிறது. படிகட்டுகள் இருந்தாலும், அதை புறந்தள்ளி விட்டு, 'லிப்ட்'டில் பயணித்து, அடுத்த மாடிக்கு போக வைக்கிறது. இப்படித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது, பெரும்பாலான இளசுகளின் வாழ்க்கை. உடல் நலனுக்கு என, முக்கியத்துவம் குறைந்து போகிறது.அப்படி இருக்கக் கூடாது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்த தலைமுறைக்கு பாடம் நடத்துகிறார், 90 வயது 'இளைஞர்' ஒருவர்.

இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் சிறப்பு.மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வடபொன்முடி கிராமத்தில் வசித்து வருபவர், அட்டி மாரணகவுண்டர். வயதாகி விட்டதே என்று ஓய்வெடுக்கவில்லை. மனைவி, மகன் இருந்தாலும், உழைப்பு தான் பிரதானம் என்பதை, இதுவரை கடைபிடித்து வருகிறார். வானம் பார்த்த பூமியில் விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலை. இருந்தாலும், இரண்டு பசுமாடுகளும், பத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும் உள்ளன.தினமும் அதிகாலை, ஐந்து மணிக்கு எழுந்திருக்கிறார் (எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒன்று). பால் கறந்து, சைக்கிளில், சென்னாபாளையம் கிராமத்தில் இருக்கும் பால் கூட்டுறவு சொசைட்டிக்கு சென்று கொடுக்கிறார்.

அங்கிருந்து திரும்பும் போது, பசுக்களுக்கு தேவையான கழுநீரை, கிராமத்தில் உள்ள வீடுகளில் சேகரித்து, திரும்ப தொடர்கிறது பயணம்.மதிய உணவுக்கு பின், நமக்கெல்லாம் துாக்கம் வருவது இயல்பு. ஆனால், இவர் ஓய்வெடுப்பதில்லை. கால்நடைகளுக்கு தேவையான உணவு வழங்குவதில், பயங்கர பிசி. மாலையில், மீண்டும் பால் கறந்து, காலை போன்ற மீண்டும் ஒரு பயணம். மனைவி, மகன், பேத்தி என, அவர்கள் ஊருக்குள் குடியிருக்க, இவர் மட்டும் தோட்டத்து வீட்டில் வசிக்கிறார்.

இவர் கூறியதாவது:வேலை செய்வதற்கு, வயது தடையில்லை. உடல் ஆரோக்கியமே முக்கியம். காரமடையில் பிறந்து, கல்யாண வயதில், இந்த கிராமத்தை அடைந்தேன். இந்த வயதிலும் உழைக்க கை கொடுத்தது, நான் உண்ட இயற்கை உணவுகளும், உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவு வகைகளும் தான். கம்பு கேழ்வரகு, சோளம் ஆகியவை பிரதான உணவுகள். தினமும் சைக்கிளை ஓட்டிச் செல்வது, ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. இக்காலத்தில், உணவுப் பழக்க முறை எல்லாம் மாறி விட்டது. இள வயதுகாரர்கள் கூட, உடல் பலவீனத்தால், மருத்துவமனையில் நிற்பதை பார்க்கும் போது, மனம் வருத்தப்படுகிறது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால், நீடூழி வாழ வழி வகுக்கும் என்கிறார்.

இவர் சொன்ன வாழ்க்கை நடைமுறை, இவருக்கானது மட்டுமல்ல... எல்லோருக்குமானது தானே...!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-டிச-202010:38:15 IST Report Abuse
Malick Raja மோடிஜிக்கு அனுப்பி வையுங்கள் பிஜேபியில் சேர்த்து விடுவார்கள்
Rate this:
Cancel
28-நவ-202023:50:13 IST Report Abuse
Ram Pollachi இன்றைய தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்பாலை கொடுக்காததால் நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம் எல்லாம் போச்சு. கம்பு, ராகி, சோளம் மற்றும் கோதுமையை சாப்பிடுவதை கெளரவ குறைச்சலாக நினைத்து குக்கர் சோற்றை திண்று நீரழிவு வலையில் சிக்கிக்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X