பொது செய்தி

தமிழ்நாடு

அன்பை சுமந்து... சுமந்து...!

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020
Share
Advertisement
ஐயா... ஆத்தா...அப்புச்சி... அம்முச்சி... என, பேரக்குழந்தைகள் மழலை மொழியில் கூப்பிடுவதை காதாற கேட்பது, எவ்வளவு ஒரு மகிழ்ச்சி. மருந்து ஏற்படுத்தாத மாற்றத்தை, இந்த வார்த்தைகளும், குழந்தைகளின் அன்பும், உடலுக்குள் ஏற்படுத்தி விடும்.கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், குழந்தையை, அத்தை குளிப்பாட்டுவார். சித்தி வாரி விடுவார். பாட்டி, உணவு ஊட்டி விடுவார். தாத்தாவின் மடியில்
 அன்பை சுமந்து... சுமந்து...!

ஐயா... ஆத்தா...அப்புச்சி... அம்முச்சி... என, பேரக்குழந்தைகள் மழலை மொழியில் கூப்பிடுவதை காதாற கேட்பது, எவ்வளவு ஒரு மகிழ்ச்சி. மருந்து ஏற்படுத்தாத மாற்றத்தை, இந்த வார்த்தைகளும், குழந்தைகளின் அன்பும், உடலுக்குள் ஏற்படுத்தி விடும்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், குழந்தையை, அத்தை குளிப்பாட்டுவார். சித்தி வாரி விடுவார். பாட்டி, உணவு ஊட்டி விடுவார். தாத்தாவின் மடியில் துாங்குவார். எந்த விஷயம் என்றாலும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி தான் முடிவெடுப்பர். குடும்பத்துக்குள், சின்ன, சின்ன சச்சரவுகள் வந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் தான் நீதி வழங்குவர். அது, அத்தோடு முடிந்து போகும்.ஊரில் திருவிழா என்றால், ஒரு குடும்பம் போவது, ஊர்வலமாக தெரியும். கால மாற்றத்தில், யார் கண் பட்டதோ தெரியவில்லை. கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து போகிற ஒரு சூழல்.

ரேஷன் கார்டில், தனித்தனியாக பெயர் சேர்ப்பதில் துவங்கி, தனித்தனி குடும்பங்கள் என, பிரிந்து போன உறவுகள். தாயின் மடியில் படுத்துறங்கும் நிம்மதியும், உருண்டை கட்டி நமக்கு வழங்கும் உணவும், இப்போது கிடைப்பதில்லை.காதோரம் சொல்லும் ரகசியம், மறந்து போனது. மொபைல் போனில் பேசிக் கொள்வது அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு நீதி கதைகள் சொல்ல ஆள் இல்லை. குழந்தைகள், மற்றவர்களுடன் எப்படி பேச வேண்டும் என்று, சொல்வதற்கு, நம்மவர்களில் பலருக்கு நேரம் கிடைப்பதில்லை.

மொபைல் போனில் அனுதினமும் விளையாட்டு.கணவரும், மனைவியும் பணிக்கு சென்றால், இரண்டு நிமிடத்தில் தயாராகும் உணவு, குழந்தையின் உடலுக்கு சத்து சேர்க்க தவறுகிறது. இதில், தனித்து விடப்படும் பெற்றோரின் நிலை தான் பரிதாபம். விசேஷம் வந்தாலும், மனதுக்குள் இருக்கும் இவர்களின் பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை. பலருக்கோ, முதியோர் இல்லத்தில் வசிப்பிடம்.உறவுகளை, பாசத்தை எது பிரிக்க வைத்தது... ஒவ்வொரு காரணம் நம்மிடம் இருக்கும். எதுவாக இருந்தாலும், தனிக் குடும்பம், தனிநபர் என சுருங்கி வரும் ஆபத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பும் இதில் அடங்கும்.அதே நிலை, நாளை நமக்கும் நிச்சயம் வரக்கூடும். மேற்கத்திய கலாசாரங்களை, உடைகளோடு நிறுத்திக் கொள்வோம். பெற்றோரும், நீங்களும் இரண்டு வீடுகள் 'தள்ளி' இருப்பது தவறல்ல. 'தள்ளி' வைத்து விட வேண்டாம் என்பது தான் அறிவுரை. அன்பால் சூழப்பட்டது இந்த உலகு. அதில், உறவுகளும் இணைந்தால், அந்த உலகு, நம் வீட்டுக்குள் சுற்றிக் கொண்டே இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X