பொது செய்தி

தமிழ்நாடு

இனி எல்லாம் மகிழ்ச்சியே...!

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020
Share
Advertisement
எது மகிழ்ச்சி தரும்...சிறு குழந்தையிடம் கேட்டால், சாக்லேட், பிடித்தமான உணவுப் பொருட்கள் என்பார்கள்.பெற்றோரிடம் கேட்டால், தங்கள் குழந்தைகள், நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று சொல்வார்கள்.படித்து கொண்டிருப்பவர்களுக்கு, தேர்வில் வெற்றி பெற்றால் தான் மகிழ்ச்சி என்று, விருப்பம் தெரிவிப்பார்கள்.வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு, வாழ்க்கை எல்லா விதத்திலும்
 இனி எல்லாம் மகிழ்ச்சியே...!

எது மகிழ்ச்சி தரும்...சிறு குழந்தையிடம் கேட்டால், சாக்லேட், பிடித்தமான உணவுப் பொருட்கள் என்பார்கள்.பெற்றோரிடம் கேட்டால், தங்கள் குழந்தைகள், நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று சொல்வார்கள்.படித்து கொண்டிருப்பவர்களுக்கு, தேர்வில் வெற்றி பெற்றால் தான் மகிழ்ச்சி என்று, விருப்பம் தெரிவிப்பார்கள்.

வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு, வாழ்க்கை எல்லா விதத்திலும் பூர்த்தியாக வேண்டும் என்று, தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.நல்ல வீடு, வாகனம், கை நிறைய சம்பளம் என்பது பலருக்கு இலக்கு. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி பட்டியல் நீளும். இப்படியாக ஒரு பக்கம் இருந்தாலும், மகிழ்ச்சியை தொலைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் நிதர்சனம்.

மகிழ்ச்சியான வாழ்க்கை தான் அத்தனை பேரின் ஆசையாக இருக்கும். ஆனால் கவலைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என சோகங்கள் எதிர்பாராத விருந்தாளிகளாக வந்துவிடுகின்றன. பணம், நம் தேவைகளை நிறைவேற்றக் கூடியது தான் என்றாலும், பணத்தால் முழுவதுமாக மகிழ்ச்சி கிடைத்து விடுவதில்லை. பெரிய பதவிகளில் இருப்போருக்கு, தங்களின் உண்மையான சுபாவம் மறந்து போகிறது.

நகைச்சுவைக்கு சிரிப்பு வந்தாலும், அந்த இடத்தில், யாராவது தவறாக எண்ணி விடுவார்களோ என்று எண்ணி, சிரிப்புக்கும் முட்டுகட்டை போடுகிறோம்.இதற்கு மாறாக, நம் விருப்பமான ஒன்றை மேற்கொள்ளும் போது, தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி. அது, இளையராஜாவின் இசையாக இருக்கலாம். குளியலறையில் பாட்டு பாடுவதாக இருக்கலாம். சிறுவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாக இருக்கலாம்.

அதை மேற்கொள்ள என்ன தயக்கம் என்பது தான் தெரியவில்லை.ஆசை, கோபம், பணம், உணர்ச்சிகள் என அனைத்திலும் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தால், இந்த நொடி உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். நீங்கள் எந்த காரியம் செய்தாலும், அதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது திருப்தியாக இருக்கிறீர்களா என கேட்டுப்பாருங்கள். இல்லை என்றால் என்ன காரணம் என ஆராய்ந்து, அதை சரி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.உங்களை சுற்றியுள்ள விஷயங்களை கவனியுங்கள். மகிழ்ச்சியைத் தேடுங்கள். மகிழ்ச்சியை மட்டுமே தேடுங்கள். பின் காண்பவை எல்லாமே மகிழ்ச்சியாகவே இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X