குன்னுார்:குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி தேசிய மாணவர் படை சார்பில், அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகள் குறித்து அறிந்து கொள்ளநவ., 26ம் தேதி அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி தேசிய மாணவர் படை சார்பில், அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் வண்டிச்சோலையில் துவங்கி பஸ்ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.ஒருங்கிணைப்பாளர் என்.சி.சி., அலுவலர் சிந்தியா ஜார்ஜ் தலைமை வகித்தார்.டி.எஸ்.பி., மகேஷ்வரன் முன்னிலையில், அரசியலமைப்பு சட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து நாட்டு நலப் பணி திட்ட கூட்டம் கல்லூரியில் நடந்தது. திட்ட அலுவலர் மலர்விழி வரவேற்றார். ஆங்கில இலக்கிய மாணவி ரோஷினி ஜெனிபர் அரசியலமைப்பு முக்கியத்துவம் குறித்தும், 2ம் பிரிவு திட்ட அலுவலர் அனிதா அரசியலமைப்பின் அடிப்படை குறித்தும் பேசினர். மாணவி ஐரின் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE