பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சின்னநெகமம் ஊராட்சியில், தேவையன்புதுார் கிராமத்தை சேர்ந்தவர்கள், ரேஷன் பொருள்களை, சின்னநெகமம் சென்று பெற்று வந்தனர். மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, நெகமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், தேவையன்புதுாருக்கு அம்மா நகரும் ரேஷன் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.நகரும் ரேஷன் கடை துவக்க விழா தேவையன்புதுாரில் நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் வைத்திநாதன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வராஜா, குடிமைப்பொருள் தனி தாசில்தார் விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE