மடத்துக்குளம்:ரயில்வே கேட் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி உடைந்து குடிநீர் வீணாகிறது.மடத்துக்குளம் நால்ரோடு அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் தேவைக்காக, பேரூராட்சி சார்பாக குடிநீர் தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு ரோடு ஓரம் உள்ள டேங்க் மேல் பகுதி உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் தொட்டியின் மேல்பகுதி உடைந்துள்ளது. குடிநீர் வினியோகம் செய்ய, ஒவ்வொரு முறை இதில் நீர் நிரப்பும் போதும், உடைப்பின் வழியாக பல நுாறு லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதோடு ரோடு முழுவதும் நீர் வழிந்து ஓடுகிறது. இதற்கு தீர்வாக, உடைந்த தொட்டியை அகற்றி விட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE