அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு மீது வீண்பழி சுமத்தி ஆதாயம் அமைச்சர் உதயகுமார் சாடல்

Added : நவ 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை:''நிவர் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உயிர்பலி ஏற்படாமல் தடுத்து தமிழகத்தை பாதுகாத்த அரசின் மீது வீண்பழி சுமத்தி தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார்,'' என மதுரையில் அமைச்சர் உதயகுமார் சாடினார்.கோவிட் கேர் சென்டர் கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாராவதை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கையால்
அரசு மீது வீண்பழி சுமத்தி ஆதாயம்  அமைச்சர் உதயகுமார் சாடல்

மதுரை:''நிவர் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உயிர்பலி ஏற்படாமல் தடுத்து தமிழகத்தை பாதுகாத்த அரசின் மீது வீண்பழி சுமத்தி தி.மு.க.,தலைவர் ஸ்டாலின்
அரசியல் ஆதாயம் தேடுகிறார்,'' என மதுரையில் அமைச்சர் உதயகுமார் சாடினார்.

கோவிட் கேர் சென்டர் கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாராவதை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கையால் நிவர் புயலால் உயிர் சேதம்
ஏற்படாதது குறித்து ஊடகங்கள் பாராட்டியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழக நிலவரங்களை கேட்டு தேவையான உதவிகள் செய்யப்படும் என அரசு நடவடிக்கைகளை பாராட்டியிருக்கிறார். இது தெரிந்தும் ஸ்டாலின் நிவர் புயலிலும் அரசியல் செய்ய நினைக்கிறார்.

கொளத்துார், வில்லிவாக்கம் உட்பட 11 சட்டசபை தொகுதிகளில் உணவு, நிவாரண
பொருட்களை வழங்கியதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் புயல் பாதிக்கப்படும்
பகுதிகளை கண்டறிந்து 2,25,398 பேரை 3042 நிவாரண மையங்களில் தங்கவைத்து தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 4133 தாழ்வானபகுதிகள் கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்கினால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடிந்தொடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். புயலிலும் மக்கள் நலனை எண்ணாமல் ஸ்டாலின்
அரசியல் செய்ய நினைத்தால் மக்கள் சரியான பாடம் கற்பிப்பர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-நவ-202007:09:45 IST Report Abuse
Bhaskaran Saalaaiyorathil velayatrathugal Ivargalai patri annathurai annaike sollitaar
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
28-நவ-202003:13:37 IST Report Abuse
Baskar இவர்கள் பிழைப்பே இது தானே. அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை. இல்லை என்றால் இவர்கள் பிழைப்பு நாறிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X