மாவட்டத்தில் தடையை மீறி டூவீலர், கார், பஸ்களில் அதிக ஒலிப்பும் 'ஏர் ஹார்ன்'களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் சில தனியார் பஸ்கள் இடைவிடாது 'ஏர் ஹார்ன்'களை ஒலித்து மக்களை பீதியடைய செய்கின்றன.பொதுவாக பஸ்ஒலிப்பான்கள் 100 டெசிபல் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், பலர் 150 முதல் 180 டெசிபல் வரை ஒலிக்கும் ஹார்ன்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் நடந்து செல்வோர்கூட, 'ஏர் ஹார்ன்' சத்தத்தில் விபத்தில் சிக்குகின்றனர். நகர் முழுவதும் ஒலி மாசும் அதிகரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது.பள்ளி, மருத்துவமனை, முதியோர் இல்லம், வழிபாட்டுத்தலங்கள் போன்ற அமைதி நிலவ வேண்டிய பகுதியிலும் பொறுப்பின்றி ஒலி பெருக்கியை அலறவிடுகின்றனர். எனவே, நகரில் 'ஏர் ஹார்ன்'களை பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் கூறுகையில், 'அதிக ஒலி எழுப்பும் 'ஏர் ஹார்ன்' பயன்படுத்துவோர், ெஹல்மெட் அணியாதவர் போன்றோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளோம். தற்போது தினமும் போக்குவரத்து விதிமீறும் 2000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE