பொது செய்தி

தமிழ்நாடு

கொடையில் மிதமான மழை

Added : நவ 28, 2020
Share
Advertisement
கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் இருதினங்களாக மாலையில் மிதமான மழை பெய்தது.நிவர் புயல் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கணிசமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும் புயல் கரையை கடந்தபோது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மாலையில் மிதமான மழை பெய்தது. தற்போதைய மழை குறுவிவசாயம் மற்றும் மலைத்தோட்டப்

கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் இருதினங்களாக மாலையில் மிதமான மழை பெய்தது.நிவர் புயல் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கணிசமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும் புயல் கரையை கடந்தபோது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மாலையில் மிதமான மழை பெய்தது. தற்போதைய மழை குறுவிவசாயம் மற்றும் மலைத்தோட்டப் பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மழை நீடிப்பதால் குளிரின் தாக்கம் தணிந்துள்ளது.வத்தலக்குண்டு:

நிவர் புயலுக்கு மழை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த மக்கள் 1 மணி நேரம் கனமழையால் மகிழ்ச்சி அடைந்தனர். காளியம்மன் கோயில், மதுரை, திண்டுக்கல் ரோடுகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. மார்க்கெட் சகதி காடாக மாறியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X