மதுரை: ''பயிர் சுழற்சியினால் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இச்சத்துகள் பயிர்கள் மூலம் மனிதர்கள், கால்நடைகளுக்கும் கிடைக்கிறது'' என மதுரை விவசாய கல்லுாரி மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் கண்ணன் கூறினார்.அவர் கூறியதாவது: ஒரே பயிர்களை பயிரிடுவதற்கு பதிலாக அறுவடை முடிந்தவுடன் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இதனால் பூச்சி மற்றும் களையினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். நீர் மற்றும் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை மண்ணின் அனைத்து ஆழத்திற்கும் எளிதில் ஊடுருவச் செய்கிறது. மண்ணின் வெவ்வேறு அடுக்குகளில் உள்ள ஊட்டச்சத்துகளை பயிர்கள் எடுத்து கொள்கின்றன. மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துகளை சமமான அளவில் நிலைநிறுத்துவதோடு, தழைச்சத்து சேமிப்புத்திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது. மண்ணின் கரிமச்சத்தையும் அதிகரிக்கிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE