மதுரை: மதுரை டி.ஆர்.ஓ., காலனி பாலநாகம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. கோயில் நிர்வாகிகள் ராகவன், காளீஸ்வரன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி., அலுவலக இன்ஸ்பெக்டர் மன்னவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். யாகசாலை பூஜைகளை மணிகண்ட சிவம் சிவாச்சாரியார்கள், கோயில் அர்ச்சகர் சிவராமகிருஷ்ணன் செய்தனர்.சோழவந்தான் அய்யனார் தெரு செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் கணேசன் தலைமையில் நவ.,26கணபதி ஹோமம், முதல் காலபூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து புனிதநீரை கோபுர கலசத்தில்ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.மேலுார்புலிமலைப்பட்டி கைலாச விநாயகர் மற்றும் மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்கர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE