17 போலீசார் இடமாற்றம்மதுரை: நகரில் ஸ்டேஷன்கள், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய ஒரு பெண், 4 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட 17 பேர் அவர்கள் விருப்பத்தின்பேரில் மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றப்பட்டனர். இங்கிருந்த 6 பேர் வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றப்பட்டனர்.வங்கியில் மோசடிமதுரை: வடக்குவெளிவீதி பாங்க் ஆப் பரோடா கிளையில் வாடிக்கையாளர்களின் 2162 கிராம் அடகு நகைகளை மறுஅடகு வைத்து ரூ.1.11 கோடி முறைகேடு செய்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக வங்கி அதிகாரி பாலகிருஷ்ணன் உட்பட 9 பேர் மீது விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமியுடன் திருமணம் மாப்பிள்ளை கைதுமதுரை:பொன்மேனி வினோத்குமார் 27. இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்தது குறித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய சமூக அலுவலர் யோகம்மாள் புகாரில் வினோத்குமார், தாயார் ராஜேஸ்வரி உட்பட மூவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.பஸ்சில் திருட்டுமதுரை: ரிசர்வ் லைன் சரவணன் 43. திருச்சியில் இருந்து மதுரைக்கு பஸ்சில் வந்தார். எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் வந்து பார்த்தபோது லேப்டாப் இருந்த பை திருடப்பட்டிருந்தது. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.வாடகைக்கு எடுத்து விற்றவர் கைதுவாடிப்பட்டி: நாகமலைபுதுக்கோட்டை எலக்ட்ரானிக் கடையில்டிரில்லிங் மிஷின்கள் திருடுபோனது. தனிப்படை எஸ்.ஐ.,க்கள் முத்துபாண்டி, அண்ணாதுரை, போலீசார் அலெக்ஸ், கோகுல் ஆகியோர்அலங்காநல்லுார் கரடு காலனி மணிகண்டனை கைது செய்தனர். விசாரணையில் மதுரை நகர், பரமக்குடி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிஷின்களை வாடகை எடுத்துவிற்றது தெரிந்தது. ரூ.3.60 லட்சம் மதிப்புள்ள மிஷின்களை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE