பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

Added : நவ 28, 2020
Share
Advertisement
திருப்பரங்குன்றம்: கொரோனா தடை உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்று (நவ., 28) மாலை 4:00முதல் இரவு 7:00 மணி வரை, நாளை மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை கோயிலின் பிரதான நுழைவு வாயில் வழியாக செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டு, கோயில் வலதுபுறமுள்ள திருக்குளம் வாசல் வழியாக பக்தர்கள்

திருப்பரங்குன்றம்: கொரோனா தடை உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்று (நவ., 28) மாலை 4:00முதல் இரவு 7:00 மணி வரை, நாளை மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை கோயிலின் பிரதான நுழைவு வாயில் வழியாக செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டு, கோயில் வலதுபுறமுள்ள திருக்குளம் வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு 7:00 மணிக்கு பின் பிரதான வாயில் வழியாக அனுமதிக்கப்படுவர். நவ.. 29 அன்று அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தீபம் ஏற்றப்படும் போது பக்தர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் மலைமேல் செல்ல அனுமதி இல்லை. கோயிலுக்குள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுவர் என துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X