இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020
Share
Advertisement
இந்திய நிலவரம்1. மருத்துவமனையில் தீ: கொரோனா நோயாளிகள் ஐவர் பலிஆமதாபாத்: குஜராத்தின் ராஜ்கோட் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில், நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து பேர் பலியாயினர்.2. 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானியின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்
crime, round up, india, tamil nadu, world, ரவுண்ட்,அப், இந்தியா, தமிழகம், உலகம்


இந்திய நிலவரம்


1. மருத்துவமனையில் தீ: கொரோனா நோயாளிகள் ஐவர் பலி
ஆமதாபாத்: குஜராத்தின் ராஜ்கோட் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில், நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து பேர் பலியாயினர்.

2. 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானியின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், படுகாயமடைந்த பிரேம் பகதுார் காத்ரி மற்றும் சுக்பீர் சிங் ஆகிய நம் வீரர்கள், வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, நம் ராணுவம் தரப்பில் பாக்., வீரர்களுக்கு உரிய பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்

3. முன்னாள் அமைச்சர் மீது வழக்கு
ஜம்மு- - காஷ்மீர்: ஜம்மு- - காஷ்மீரில், அரசு நிலங்களை தனி நபர்களுக்கு உரிமையாக்கும் ரோஷ்னி திட்டத்தில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தாஜ் மொஹியுதீன் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், ''ரோஷ்னி திட்டத்தில் நான் முதலீடு செய்யவோ, நிலம் வாங்கவோ இல்லை,'' என, மொஹியுதீன் கூறியுள்ளார்.


latest tamil news



தமிழக நிலவரம்

1. ராமேஸ்வரத்தில் கோயில் தீர்த்தம் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தம் திறந்து, தனுஷ்கோடி ராமர் கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க கோரி ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஊரடங்கினால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலுள்ள 22 தீர்த்தங்கள், தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில், அரிச்சல்முனை கடற்கரை மூடினர். ஊரடங்கு தளர்த்திய செப்.,1க்கு பின்னும் பக்தர்கள் தீர்த்தங்களில் நீராட, அக்னி தீர்த்த கரையில் பூஜை செய்ய, கோதண்டராமர் கோயிலில் தரிசிக்க, அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அரசு தடை விதித்தது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்ததால், பக்தர்கள் வருகை குறைந்தது. தீர்த்தங்கள், தனுஷ்கோடி சாலையை திறக்க கோரி நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி, நகர் செயலர் நம்புராஜன், மாவட்ட செயலர் ராஜசேகர், சரவணன், பலர் பங்கேற்றனர்.

2. விபத்துகளில் இருவர் பலி

மப்பேடு: மப்பேடு அடுத்த, கொண்டஞ்சேரியைச் சேர்ந்த மோகன் மனைவி பார்வதி, 55. கடந்த, 21ம் தேதி, மகன் ஜெயகுமாருடன், 'புல்லட்' இருசக்கர வாகனத்தில், பேரம்பாக்கம் சென்றார்.பேரம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, நிலை தடுமாறிய வாகனம் விழுந்தது. இதில், தலையில் படுகாயமடைந்த பார்வதி, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

3. ஜெனரேட்டர் புகையை சுவாசித்த இருவர் பலி
மதுராந்தகம் : மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்ற, ஜெனரேட்டரை பயன்படுத்தியதில், அதிலிருந்து வெளியேறிய நச்சு புகையை சுவாசித்த இரு வாலிபர்கள் உயிர் இழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தோர் ராஜேஷ், 26, ராஜேஷ்குமார், 25. கொத்தனாராக இருந்த இவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், லத்துார் அடுத்த பவுஞ்சூரில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி, கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். புயல் காரணமாக, இரு தினங்களாக மின் தடை செய்யப்பட்டு இருந்ததால், மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்ற, அங்கிருந்த ஜெனரேட்டரை பயன்படுத்த, இருவரும் முயன்றுள்ளனர்.அப்போது, ஜெனரேட்டரில் மின் கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து நச்சு புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இதை சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட ராஜேஷ் மற்றும் ராஜேஷ்குமார், பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுகுறித்து, அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

4. ஏரியில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

ஆவடி : ஏரியில் மூழ்கி, கட்டட தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி, விளிஞ்சியம்பாக்கம் ஏரியில், ஆண் சடலம் மிதப்பதாக, ஆவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று, உடலை மீட்டு விசாரித்தனர்.

இதில், இறந்த நபர், மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.மேலும், சேக்காடு, மேட்டுத் தெருவைச் சேர்ந்த, கட்டட தொழிலாளியான திருப்பதி, 55, என்பதும் தெரியவந்தது. கடந்த, 23ம் தேதி வெளியூர் செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.புளியந்தோப்பு, வாசுகி நகர் பழைய மேம்பாலம் அருகே, ஆண் சடலம் மிதந்து வந்ததாக, நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற புளியந்தோப்பு போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.


latest tamil news



உலக நிலவரம்

1. துாதரகத்திற்கு வெளியே போராட்டம்

நியூயார்க்: மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து, நேற்று முன்தினத்துடன், 12 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்தியாவில், 12ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்திற்கு வெளியே, போராட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும், அவர்கள் முழக்கமிட்டனர். 'டைம்ஸ்' சதுக்கத்திலும், சிலர் போராட்டம் நடத்தினர்.

2. வட கொரியாவில் மரண தண்டனை

சியோல்: கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுத்து, பொருளாதார பாதிப்பை சரிசெய்ய, அதிபர் கிம் ஜங் உன், கொடூரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக, அன்னிய பணப் பரிமாற்ற விகிதம் கடும் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமான, மூத்த அதிகாரி ஒருவருக்கு, கடந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல், சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்த நபருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

3. அமெரிக்க ஊழியர்களுக்கு சிறை

கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலா அரசின் எண்ணெய் நிறுவனத்தால் நிர்வகிக்கப் படும், 'சிட்கோ' என்ற சுத்திகரிப்பு தொழிற்சாலை, அமெரிக்காவில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆறு பேர், மூன்று ஆண்டுகளுக்கு முன், வேலை காரணங்களுக்காக வெனிசுலாவிற்கு வந்தனர். பின், ஊழல் குற்றச்சாட்டுகளில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்கர்கள், ஆறு பேரையும், குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X